Wednesday, July 29, 2009

கவிஞன்

என்னை கவிஞனாக்கிய உனக்கு
ஏனோ
காதலனாக்க மனம் வரவில்லை........

Tuesday, July 28, 2009

மழை

"எனக்கு மழையில் நனைதல் பிடிக்கும்"
என்று நீ சொல்லியதிலிருந்து
மழை வரும்போதெல்லாம் வெளியே செல்கிறேன்
நனைவதற்காக அல்ல
உன்னை நினைப்பதற்காக........

Monday, June 8, 2009

நட்பு

எதிர்பார்ப்பில்லாமல் பழகுவதுதான்

நட்பு என்கிறார்கள்

நான் எதிர்பார்ப்புடன் தான் பழகுகிறேன்

என்றும் உன் நட்பை...........

எதிரி

அவள் எனக்கு எதிரிதான்
என்
தூக்கத்தை கெடுத்த வகையில்......

Wednesday, April 1, 2009

மாற்றம்

தூக்கம் வருகிறது தூங்க முடியவில்லை,
பசிக்கிறது சாப்பிட முடியவில்லை,
காதல் என்று நினைக்க வேண்டாம்
shift மாறிவிட்டது.......

முடிவு

என் நான்கு வருட
சொல்லாத காதல் முடிவுக்கு வந்தது
அவள் திருமண அழைப்பிதழைப் பார்த்த
பிறகு.......................

Friday, March 27, 2009

கணினி

அன்று,காற்று என்ற மூன்றெழுத்தில்
மூச்சு விட்டுக்கொண்டிருந்த உலகம்
இன்று, கணினி என்ற மூன்றெழுத்தில்
மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது....

தாய்

தாயின் பத்து மாதக் கடனை
எப்படி அடைப்பதேன்று
யோசித்துக்கொண்டே இருக்கிறேன்
ஏறிக்கொண்டே இருக்கிறது
வட்டி ................

காதல்

இப்போதெல்லாம் நான்
பேருந்தில் ஊனமுற்றோர் இருக்கையில் தான்
அமர்கிறேன்.
என் இதயம் என்னிடம் இல்லை..........

தமிழன்

உயிர் இழந்த ஒவ்வொரு
இலங்கை தமிழனையும் நினைத்து
உறக்கம் இழக்கிறேன்
தமிழனாக இருப்பதனால் மட்டுமல்ல
மனிதனாக இருப்பதாலும் ...........